டெல்லி:

திகரித்து வரும் கொரோனா பீதி காரணமாக மக்கள் வீட்டுக்குள்யே முடங்கி உள்ளனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவுகளை ஆன்லைன் வணிகம் மூலம் நிறைவேற்றி வருகின்றனர்.

இதனால், பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் சுமார் 1 லட்சம் பேரை புதிதாக வேலை நியமிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.

ஆன்லைன் நிறுவனமான அமேசானில் அனைத்துவிதமான பொருட்களும் கிடைக்கின்றன. இந்நிறுவனத்துக்கு அமெரிக்கா உள்பட  உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. தற்போது கொரோனா பீதி காரணமாக அமெரிக்கர்கள், வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கின்றனர். அனைவரும் ஆன்லைன் மூலமே தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அமேசான் நிறுவனம் தத்தளித்து வருகிறது.

பொருட்களை விநியோகம் செய்ய தேவையான ஊழியர்கள் இல்லாத நிலையில், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அமேசான் தெரிவித்து உள்ளது.

கொரோனா பீதியால் பெரும்பாலான நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது…