ஜொமோட்டோ, ஸ்விக்கிக்கு போட்டியாக களமிறங்கும் அமேசான்

பெங்களூரு

ணவு அளிக்கும்  நிறுவனங்களான ஜொமொட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்குப் போட்டியாக அமேசான் களம் இறங்குகிறது.

ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று உணவு அளிக்கும் தொழிலில் இந்தியாவில் ஜொமொட்டோ மற்றும் ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் முதலிடம் வகிக்கின்றன. வாடகைக்கார் நிறுவனமான உபேர் நிறுவனம் இந்த துறையில் தனது உபேர் ஈட்ஸ் நிறுவனம் மூலம் களம் இறங்கியது. ஆனால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் அது தனது சேவையை நிறுத்துக் கொண்டுள்ளது.

தற்போது அமேசான் நிறுவனம் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே  அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று உணவு வழங்கும் சேவையை செய்து வந்தது. ஆனால் அந்நாட்டில் நிலவிய கடும் போட்டியால் அமேசான் உணவு அளிக்கும் பிரிவை மூடி விட்டது. தற்போது பெங்களூருவில்

அமேசான் நிறுவனம் தனது உணவு வழங்கும் சேவையை தொடங்கப்பட உள்ளது.  இந்நிறுவனம் பிரபல தொழிலதிபரும் இன்ஃபோசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தி நடத்தி வரும் கட்டமரன் (கட்டுமரம்) என்னும் நிறுவனத்துடன் கைகோர்க்க உள்ளது. கட்டமரன் நிறுவனத்துக்கு ஏற்கனவே ஊழியர்கள் உள்ளதால் இரு நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவில் அமேசான் நிறுவனத்துக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் நல்ல போட்டி இருப்பது போல் இந்த துறையிலும் நல்ல போட்டி இருக்க வாய்ப்புள்ளது.