மும்பை:

டன் சுமையால் தள்ளாடும் அனில் அம்பானி: சொத்துக்களை விற்க முடிவு
மும்பை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) தலைவர் அனில் அம்பானி, தனது ஸ்பெக்ட்ரம், மொபைல் கோபுரங்கள், ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் தனது கடன் சுமையை குறைக்க திட்டமி்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் குழு தலைவர் அனில் அம்பானி கூறியது,

பெருகிவரும் இழப்புக்களால் ஆர்.காம் நிறுவனம் 2 ஜி மற்றும் 3 ஜி வயர்லெஸ் சேவை .2016 டிசம்பரில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் இந்நிறுவனங்களின் கடன் சுமை 25 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது 45 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து நஷ்டத்தில் இயங்கும் நிறுவன சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் 2018 ஜனவரி முதல் 2018 மார்ச் மாதத்திற்குள் மொத்த கடன் சுமையை 85 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது.

தொலைதொடர்பு உள்கட்டமைப்பை தவிர, இந்நிறுவனம் புதுடில்லி,, சென்னை, கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்று கடன் சுமையை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.