கச்சா எண்ணெய் விலை சரிவு: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை இழந்த முகேஷ் அம்பானி

மும்பை: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை இழந்திருக்கிறார் முகேஷ் அம்பானி.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. அந்த நாடுகள் அனைத்தும் கடும் பாதிப்புகளையும், பொருளாதார சரிவுகளை சந்தித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பீதி காரணமாக பல நாடுகள் விமான போக்குவரத்துக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றன. சுற்றுலா, உற்பத்தி உள்ளிட்ட பல துறைகள் இறங்கு முகத்தில் இருக்கின்றன.

போக்குவரத்து முடங்கியதால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் சரிவை சந்தித்துள்ளதும் முக்கியமானதாகும். உலகின் பல நாடுகளின் பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

இந் நிலையில் ஆசியா மற்றும் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் பெரும் இழப்பு ஏற்பட்டது.

ஒரே நாளில் 44,000 கோடி ரூபாய் ($5.8 billion) இழப்பு ஏற்பட்டுள்ளதாக போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.  அதன் காரணமாக ஆசியாவின் நம்பர் 1 அரியணையை அவர் அலிபாபா குழு தலைவரான சீனாவின் ஜாக் மாவிடம்   இழந்து இருக்கிறார்.