அம்பதி ராயுடு மற்றும் ரிஷாப் பண்ட் காத்திருப்போர் பட்டியலில் சேர்ப்பு

மும்பை: இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் மற்றும் அனுபவ பேட்ஸ்மென் அம்பதி ராயுடு ஆகியோர், உலகக்கோப்பை இந்திய அணிக்கான காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, சுழற்பந்து வீச்சாளர் அக்ஸார் படேல் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

மே மாதம் 30ம் தேதி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி.

உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் தான் இடம்பெறாதது குறித்து, ராயுடு டிவிட்டரில் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயுடுவுக்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார். இதுகுறித்துப் பேசிய தேர்வுக் கமிட்டியின் எம்.எஸ்.கே.பிரசாத், விஜய் சங்கரிடமுள்ள மூன்றுவிதமான திறன்களின் அடிப்படையில்தான் அவரை தேர்வு செய்துள்ளோம் என நியாயப்படுத்தியுள்ளார்.

மேலும், கலீல் அகமது, ஆவேஷ் கான், தீபக் சஹார் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர், நெட் பந்துவீச்சாளர்களாக, இந்திய அணியுடன் பயணிக்கவுள்ளனர்.

– மதுரை மாயாண்டி