அம்பதி ராயுடு பந்து வீச இடைக்கால தடை: ஐசிசி அதிரடி நடவடிக்கை

ந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்  அம்பதி ராயுடு பந்து வீச இடைக்கால தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளராகவும் இருந்து வருபவர் அம்பதி ராயுடு. இவர்,  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இடைக்காலத் தடைவிதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் சிட்னியில் நடைபெற்ற  இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் ஆட்டத்தின்போது, அம்பதி ராயுடு வீசிய சுழற்பந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.  ஐசிசி விதிமுறைகளுக்கு முரணாக  அவரது பந்து வீச்சு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அம்பதி ராயுடு, 14 நாட்களுக்குள்,  தனது பந்துவீச்சை சோதனைக்கு உட்படுத்தி,  தெளிவுபடுத்த வேண்டும் என ஐசிசி கூறியிருந்தது.

ஆனால்,  ஐசிசி வழங்கிய 14 நாட்கள் அவகாசத்தில் இந்திய வீரர் அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை  சோதனைக்கு உட்படுத்தி சந்தேகத்தை நிவர்த்தி செய்யவில்லை.

இதன் காரணமாக ஐசிசி விதி 4.2ன்படி, உடனடியாக அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசத் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்து உள்ளது.

மேலும்,  அம்பதி ராயுடு தனது பந்துவீச்சை சோதனைக்கு உட்படுத்தித் தெளிவுபடுத்தும் வரையிலும், சட்டப்பூர்வ அனுமதி வழங்கும் வரையிலும் இந்த தடை அமலில் இருக்கும். அதேசமயம் அவர் உள்நாட்டுப் போட்டிகளில் பந்துவீச எந்தவிதமான தடையும் இல்லை ” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.