ந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடுத்தர குடும்பம் முதல் ஏழைகள் என எல்லோருமே அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒருபக்கம் கொரோனா பயமுறுத்துகிறது மறுபக்கம் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளனர். திரைப்பட தொழிலும் நாளுக்கு நாள் நசிந்து தின சம்பளதாரர்களும், நடுத்தர நடிகர்களும் வேலை இல்லாமல் வறுமையின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள்.


ஏற்கனவே ஒரு நடிகர் குடும்பத்தை காப்பாற்ற தள்ளு வண்டியில் பழம் விற்று வருகிறார். சமீபத்தில் ஒரு இயக்குனர் மளிகை நடத்தப் போய்விட்டார். தற்போது அம்பேத்கராக நடிப்பவர் கருவாடு விற்க ரோடுக்கு வந்துவிட்டார்.
மகாராஷ்டிராவில் மராத்தி மொழியில் உருவாகும் ’பாபா சாகேப் அம்பேத்கர்’ தொடரில் நடித்து வந்தார் ரோஹன் பட்னேகர். குடும்பத்தை காப்பாற்ற இவரின் வருமானம் மட்டுமே ஆதாரமாக இருந்தது. படப்பிடிப்பு இல்லாத்தால் வருமானம் இல்லாமல் பட்டினியால் தற்கொலை நிலைக்கு சென்று விட்டார். கடைசி முயற்சியாக தற்போது தெருத்தெருவாக சென்று கருவாடு விற்று வருகிறார். அதில் வரும் வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்துகிறார்.
’கருவாடு விற்பதை அவமானமாக கருதவில்லை. இதன்மூலம் என் குடும்பத்தின் பசியாற்ற முடிகிறது’ என்றார் ரோஹன்