இந்தியாவின் தேச தந்தை அம்பேத்கர் தான்! : இயக்குனர் பா.ரஞ்சித்

ந்தியாவின் தேசத்தந்தை அம்பேத்கர் மட்டும் தான் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.

அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

“இந்தியாவின் தேசத்தந்தைஅம்பேத்கர், ர் மட்டும் தான்.  வேறு யாரும் கிடையாது.  மகாத்மாகாந்தி அல்ல. ஏனென்றால் அம்பேத்கார் மட்டும்தான் இந்த மனித குலத்தின் மாண்பை நிமிடத்துக்கு நிமிடம் பேசியவர்.

பட்டியலின சமூகத்தில் நடக்கும் ஆணவ கொலைகள் குறித்து அதிமுக, திமுக போன்ற கட்சிகள் கருத்து தெரிவிப்பதில்லை. பட்டியலின சமூகத்திற்காக பேசினால், கட்சி நடவடிக்கை பாயும் என எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் பயந்து இருந்தால், உடனடியாக நீங்கள் இருக்கும் கட்சியை விட்டு வெளியேறுங்கள்.

சமீபத்தில் நடைபெற்ற பட்டியலின மக்களின் படுகொலைகளைப்பற்றி பேசுவதற்க்கு கூட இங்கு தலித் கட்சிகளும் , கம்யூனிச தோழர்கள் மட்டுமே வருகிறார்கள். ஆனால் தனித்தொகுதிகளில் பட்டியலின மக்களால் வாக்குகள் பெற்று இன்று எம்,எல்,ஏக்களாக எம்,பி க்களாக இருப்பவர்கள் ஒரு   கண்டன அறிக்கைக்கூட விடுவதில்லை.  எந்த மக்கள் ஓட்டுகளை வாங்கி அதிகாரத்திற்கு வந்தார்களோ அந்த மக்களை கண்டுகொள்வதுமில்லை .

நம்மை கண்டுகொள்ளாத இவர்களுக்கு நாம் ஏன் நமது வாக்குகளை செலுத்தவேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஏழு தனித்தொகுதிகளில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கட்சிகள் அமைப்புகள் சேர்ந்து கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும். அவர்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களும் பணி செய்து வெற்றிபெற வைப்போம்” என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன், பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

#ambedkar #fatherofthenation- #director #paranjith