வேதாரண்யம்:

ம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத் சிலை உடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து அம்பேத்கர்சிலை உடைக்கப்பட்ட நிலையில், காவல்நிலையத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட ஜீப்பை ஒரு தரப்பினர் தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதி வன்முறைக்களமானது.

இதைத்தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு அமைதி நிலவி வருகிறது. உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக புதிய சிலை அரசு சார்பில் நிறுவப்பட்டு உள்ளது.

அம்பேத்கர் சிலை உடைப்பிற்கு பல தரப்பினர் தங்களின் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில்,  அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும்  என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறி உள்ளார். மேலும், சாதிய பயங்கரவாதத்தால் தமிழகம் வேட்டைக்காடாக மாறிவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அண்ணல் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவர். அவரது உருவச்சிலை சேதப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது!

அண்மைக்காலங்களில் தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படு வது அதிகரித்துவருகிறது. சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் யாரையும் சிறுமைபடுத்திவிட முடியாது. இப்போக்கு தடுக்கப்பட வேண்டும். அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்!

என்று டிவிட்டர் பதிவு மூலம் தனது தன்னுடைய கண்டனங்களை தெரிவித்து உள்ளார்.