இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே என அம்பேத்கார் கூறினார் : சபாநாயகர்

டில்லி

ட ஒதுக்கீட்டை வெறும் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என அம்பேத்கார் கூறியதாக பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு முறை பற்றி சமீப காலங்களாக பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.    பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.   உச்சநீதிமன்றமும் இது போல பொருளாதார மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று ராஞ்சியில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.   அப்போது அவர், ”சமுதாயத்தில் பின் தங்கியோருக்காக இட ஒதுக்கீடு திட்டம் அமல் படுத்தப்பட்டது.    இந்த திட்டத்தை நமது அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் அம்பேத்கர் கொண்டு வந்தார்.

ஆனால் அவர் இந்த இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என கூறி உள்ளார்.    ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.   அந்த காலக்கெடுவை அனைத்து அரசுகளும் நீட்டித்து வருகின்றன.    தற்போதைய அரசும் அதையே செய்துள்ளது.   இட ஒதுக்கிட்டினால் மட்டும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வுகளை மாற்ற முடியாது.” என கூறி உள்ளார்.