ஆம்புலனஸ் மூலம் உதவி.. கொரொனா வடிவில் எமன்..

ஆம்புலனஸ் மூலம் உதவி.. கொரொனா வடிவில் எமன்..

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக (டெக்னிஷியனாக) வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 15-ம் தேதி திண்டுக்கல் சென்று வந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவருக்குச் செய்யப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  உடனடியாக இவர் கடந்த 18-ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து ஒரு வார காலமாகக் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று அதிகாலை 3 மணிக்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ் மூலமாகப் பல கொரோனா நோயாளிகளை மருத்துவமனை அழைத்துச்சென்று அவர்களின் சிகிச்சைக்கு உதவிய கணேசன் அதே கொரோனாவினாலேயே பாதிக்கப்பட்டு இவ்வளவு சிறிய வயதிலேயே மரணமடைந்தது பெரிதும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  – லெட்சுமி பிரியா