சுஷாந்த் தற்கொலைபோல் தெரிய வில்லை, கால் உடைந்திருந்தது.. ஆம்புலன்ஸ் ஊழியர்   அதிர்ச்சி தகவல்..

ந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை பலர் எழுப்பினர். சுஷாந்த்தை யாராவது கொலை செய்திருக்கலாம் என்று கூட ஒரு சிலர் கூறினர், இது சர்சையானது, இதற் கிடையில் அவரது உடல் பிரேத பரிசோத னைக்கு பிறகு உடனடியாக தகனம் செய்யப்பட்டது.


சுஷாந்த் மரண வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு சென்றிருக்கிறது. சுஷாந்த் காதலி ரியா மீது கடுமையான குற்றச் சாட்டுக்களை சுஷாந்த் தந்தை கே கே.சிங் சுமத்தி போலீசில் புகார் அளித்திருக்கிறார். திருப்பத்துக்கு மேல் திருப்பமாக அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல் வந்த வண்ணமிருப்பதால் பெரும் சர்ச்சை உருவாகி வருகிறது.
இந்நிலையில் சுஷாந்த் உடலை மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர், சுஷாந்த் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ என்று கூறியிருப் பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
‘சுஷாந்த் உடலை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றபோது அவர் உடல் மஞ்சள் நிறத்தில் இருந்தது, கால்களும் வளைந்து உடைந்திருந்ததுபோல் இருந் தது. தற்கொலை செய்து கொண்ட தற்கு அடையாளமாக வாயில் நுரை ஏதும் காணப்படவில்லை. அவரது கழுத்தில் இருந்த அழுத்த குறிகளும் சந்தேகத்துக்கு இடமாக இருந்தது என தெரிவித்திருக் கிறார் ஆம்புலன்ஸ் ஊழியர்.