சென்னை:

மிழகத்தில், கால்நடைகளுக்கா பிரத்யே சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற  விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கால்நடை ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், 1962 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கால் நடைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கால்நடைகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கும் வகையில் 1962 அவசர எண்ணுடன் கூடியஅம்மா ஆம்புலன்ஸ் வாகனம் முதல்அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். மாநிலம் முழுவதும் உள்ள  32 மாவட்டங்களுக்கும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்காக செயல்படுத்தப்படும் ஆம்புலன்ஸில் முதலுதவி மருந்துகள், ஸ்கேனர் உள்ளிட்ட அனைத்தும் பொருத்தப்பட்டிருக்கும். கால்நடைகளுக்கு பெரிய பிரச்னை நிகழ்ந்தால் அந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் என்றும் சிறிய அளவிலான பிரச்னைகள் இருந்தால் கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.