உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. ஏழை பணக்காரன் எனும் பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது

உலகின் பல நாடுகள் இன்னும் ஊரடங்கில் தான் உள்ளது .இதனால் பல தொழில்கள் முடங்கி போயுள்ளது .இதில் சினிமாத்துறை மற்றும் திரையரங்க வியாபாரமும் அடங்கும். இதனால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இயங்க தொடங்கியிருக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள 100 வருட பாரம்பர்யம் கொண்ட ஏ.எம்.சி தியேட்டர் இன்று மீண்டும் திறக்கப்படுகிறதாம். அதுமட்டுமின்றி, இந்த 100 வருடத்தை கொண்டாடும் வகையில், 1920-ல் ரூபாய் 15 சென்ட்டுக்கு விற்கப்பட்ட விலைதான் தற்போதுள்ள டிக்கட்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.