அமெரிக்கா: பாலியல் ரீதியாக குழந்தைகளை துன்புறுத்திய வாலிபருக்கு 472 ஆண்டு சிறை

நியூயார்க்:

குழந்தைகளை கடத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி இணையதளம் மூலம் விற்பனை செய்த வாலிபருக்கு 472 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களைக் கடத்தி விற்பனை செய்வது, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, கடத்துதல் என சுமார் 30 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட கொலரோடோவைச் சேர்ந்த பிரோக் ஃப்ராங்லின் (வயது 31) தனது மீத வாழ்நாளை சிறையிலேயேதான் கழிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை எந்த வகையிலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்தவே 400 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று கொலரடோ நீதித்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் மனிதர்களை கடத்தி விற்கும் குற்றவாளிகளிலேயே அதிகபட்சமாக தண்டனை விதிக்கப்பட்டது இந்த வழக்கில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.