வாஷிங்டன்:

சிரியாவின் டவுமா பகுதியில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார்.

இதையடுத்து சிரியா டமாஸ்கஸ் நகரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு வான்படைகள் தாக்குதல் நடத்தின. அமெரிக்கா குண்டுகள வீசியதால் டமாஸ்கஸ் நகரம் நிலைகுலைந்தது. சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்ட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியது. இதையடுத்து இன்றிரவு மணியளவில் அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் கலந்து கொண்டு பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.