கனடா:

டந்த 2010ம் ஆண்டு பிறகு உருளைக்கிழங்கு உற்பத்தி அமெரிக்காவில் குறைந்து வருவதால், நாட்டில் உருளைக் கிழங்கில் இருந்த தயாரிக்கப்படும் பிரெஞ்ச் ஃபிரைஸ் சிப்ஸ் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக பிரபல ஆய்வு நிறுவனமான புளும்பெர்க் தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் நடைபெறும் வணிகம் மற்றும் சந்தை நிலவரங்கள்,  தரவு, பகுப்பாய்வு குறித்து ஆய்வு செய்து வருகிறது நியூயாரக்கை தலைமையிடமாக கொண்டுள்ள  புளும்பெர்க் என்ற ஆய்வு நிறுவனம். தற்போது அமெரிக்காவில் உருளைக்கிழக்கு விளைச்சல் குறைந்து வரும் நிலையில், நாட்டில் பிரெஞ்ச் பிரைஸ் போன்ற உருளைக்கிழக்கில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு உருளைக்கிழங்கு உற்பத்தி கடுமையான சரிவை சந்தித்த நிலையில், தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு உருளைக்கிழங்கு விளைச்சல் இல்லை என்று தெரிவித்திருப்பதுடன் இந்த ஆண்டும் விளைச்சல் குறைவு, அதனால் பிரெஞ்ச் ஃபிரைஸ் உள்பட உருளையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து புளும்பெர்க்  தனது ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அமெரிக்கா மற்றும் கனடாவில் உற்பத்தி செய்யப்படும உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள், அங்கு நிலவும் குளிர்ந்த மற்றும் ஈரமான வானிலை காரணமாக, எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சலை பெறவில்லை என்று தெரிவித்து உள்ளது. அக்டோபர் மாதம் அங்கு நிலவிய  தட்பவெட்க நிலை, வளர்ந்து வரும் உருளையின் விளைச்சலை தாக்கத் தொடங்கியதாகவும், மேலும் உறைபனி காரணமாக உருளைக்கிழங்கு கடுமையான தாக்கலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்து உள்ளது.

ஆல்பர்ட்டா மற்றும் இடாஹோவில் பகுதியில் உருளை பயிரிட்ட விவசாயிகள் , உறை பனியால் சேதமடைந்த பயிர்களை தோண்டி, அங்கு விளைந்திருந்த உருளைக்கிழங்குகளை சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அந்த கிழங்குகள் அளவில் சிறியதாக இருந்தாகவும் தெரிவித்துள்ளது.

அதேவேளையில்  மனிடோபா, வடக்கு டகோட்டா மற்றும் மினசோட்டாவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்த மழை பனி காரணமாக உருளையை தோண்ட முடியாத நிலையில், அப்படியே விடும் முடிவுக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அங்கு நிலவும் வானிலையால், உருளைக்கிழங்கு விளைச்சல் குறைந்துள்ள நிலையில், கனடா, உருளைக் கிழங்கு தேவையை அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஆய்வறிக்கை, இதனால், உருளைக்கிழங்கின் விலை உயரக்கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.

கனடாவில் உருளைக்கிழங்கு வளர்ப்பாளர்கள் சுமார் 12,000 மானிடோபா ஏக்கர் (சுமார் 4,900 ஹெக்டேர்) உருளைக் கிழக்கு பயிரிட்டு உள்ளதாகவும், ஆனால், நிலவும் உறைபனி காரணமாக, மாகாணத்தின்  18%  பரப்பளவில் உருளை  அறுவடை செய்யப்பட முடியாத நிலை உருவாகி உள்ளதாக மதிப்பிடப்பட்டு இருப்பதாகவும், இது கடந்த பருவத்தில் கனடா முழுவதற்கும் கைவிடப்பட்டதற்கு சமம் என்று தெரிவித்து உள்ளது. ஆல்பர்ட்டாவின் உருளைக்கிழங்கில் சுமார் 6.5% உறைபனி சேதமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பிரின்ஸ் எட்வர்ட் தீவு எண்1 அரசாங்கம் ,  நாட்டின் பயிர் சேதம் குறித்த மதிப்பீடுகளை டிசம்பர் 6 வெளியிட உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து யு.எஸ். வேளாண்மைத் துறை நவம்பர் மாதம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 6.1% குறைந்து உள்ளதாகவும், இது கடந்த  2010 க்குப் பிறகு மிகக் குறைவு என்று என்று தெரிவித்து உள்ளது.

மேலும், உருளை உற்பத்தியில் சிறந்த மகாணமான இடாஹோவில், உருளை உற்பத்தி  5.5% குறையும் என்று கணித்துள்ளது.

பொதுவாக உருளைக்கிழங்கு பெரியதாகவோ, நீளமாகவோ இருந்தால்தான், அது பிரெஞ்ச் ஃபிரைஸ் போன்ற சிப்ஸ்கள் தயாரிக்க ஏதுவாக இருக்கும். ஆனால், அங்கு பனியால் பயிர்கள் சேதமடைந்து வருவதால், உருளைக் கிழங்கின் அளவு சிறியதாக உள்ளதால், அவை சிப்ஸ் தயாரிக்க ஏதுவானதாக இல்லை என்று, சிப்ஸ் தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

பிரெஞ்ச் ஃபிரைஸ் தயாரிப்பு ஆலை ஒன்றை கனடாவின் ஆல்பர்ட்டாவின் லெத்பிரிட்ஜில் சமீபத்தில் தொடங்கிய  கேவென்டிஷ் ஃபார்ம்ஸ்  நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மேரி கீத், இதுபோன்ற ஒரு பற்றாக்குறையை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் தற்போது நிலவி வரும் உருளைக்கிழங்கு பற்றாக்குறை என்பது, “இது ஒரு சமாளிக்கக்கூடிய சூழ்நிலைதான் ” என்று கனடாவின் யுனைடெட் உருளைக்கிழங்கு வளர்ப்பாளர்களின் பொது மேலாளர் கெவின் மேக்சாக் கூறி உள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள ரபோபேங்கின் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து ஆய்வாளர் ஸ்டீபன் நிக்கல்சன், இந்த ஆண்டு உருளைக்கிழங்கு அமெரிக்கா அளவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாததால் சர்வதேச செலவுகளும் உயரக்கூடும் என்றும், இந்த ஆண்டு உருளைக்கிழங்கு விலை வட அமெரிக்கா முழுவதும் உயரும் என்றும் தெரிவித்து உள்ளார்.

உருளைக்கிழங்கு ஆணையத்தின் தொழில் உறவுகள் இயக்குனர் டிராவிஸ் பிளாக்கர் தெரிவிக்கையில், உருளையில் இருந்து தயாரிக்கப்படும் பிரெஞ்ச் ஃபிரைஸ் தேவை தற்போது அதிகரித்து உள்ளது. தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது என்று கூறி உள்ளார்.