எச்1பி விசா கொள்கையில் மாற்றமில்லை : அமெரிக்கா திட்டவட்டம்

வாஷிங்டன்

ந்தியாவுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்திய பின்பும் எச்1பி விசா கொள்கையில் அமெரிக்கா மாற்றம் அளிக்க மறுத்து விட்டது.

அமெரிக்கா வில் ஹெச்1பி விசாவின் புதிய கொள்கைகள் வரும் செப்டம்பர் 11 முதல் அமுலுக்கு வர உள்ளன.   இந்த புதிய விதிகளின்படி பல கட்டுப்பாட்டுக்கள் விதிக்கபட்டுள்ளன.  விண்ணப்பங்களில் பிழை இருக்கக் கூடாது,  அதிக ஆவணங்கள் தேவை, பணியில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிக்ள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதனால் மிகவும் கலக்கம்  அடைந்த இந்தியர்கள் இந்திய வெளியுறவுத்துறையிடம் முறை இட்டனர்.   அதை ஒட்டி இந்த விதிகளை தளர்த்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் அமெரிக்க உள்துறை அதிகாரிகளுடம் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் நடத்தினர்.

அந்த பேச்சு வார்த்தைகளால் எந்த பலனும் உண்டாகவில்லை.   இந்தியாவின் வேண்டுகோளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.  எச்1பி விசாவின் கொள்கைகளில் எவ்வித  மாற்றமும் அளிக்க முடியாது என  அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.