வாஷிங்டன்:

அமெரிக்காவும், கியூபாவும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரிகளாக இருந்த அமெரிக்காவும், கியூபாவும் ஒபாமா பதவி காலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நல்லுறவு ஏற்பட்டது. இரு நாடுகள் இடையே தூதரக உறவும் ஏற்பட்டது.

டிரம்ப் அதிபரான பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மீண்டும் சிக்கல் எற்பட்டுள்ளது. கியூபா தலைநகர் ஹவான்னாவில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்கள் மர்ம நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

காதுவலி, காது கேட்பது பாதிப்பு, தும்மல், தூக்கம் இன்மை, தலைவலி, வாந்தி -மயக்கம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு கியூபாவின் சதியே காரணம் என அமெரிக்கா குறைகூறியுள்ளது. கியூபா அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களில் 21 பேரை நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையிலான தூதரக உறவு பாதிக்கும் என கியூபா கவலை தெரிவித்துள்ளது.