விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய வீராங்கனை பூமி திரும்பினார்

--

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து உள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டாலர் மதிப்பில் மிதக்கும் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்த வகையில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த விண்வெளி வீராங்கனை பெக்கி வில்சன் நேற்று முன் தினம் பூமிக்கு திரும்பினார், விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கிய வீராங்கணை மற்றும் முதல் அமெரிக்கர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார். இவர் 665-க்கும் அதிகமான நாட்கள் தங்கியிருந்தார். சர்வதேச விண்வெளி மையத்தை வழிநடத்திய முதல் பெண் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.