அமெரிக்கா ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்து! 16 பேர் பலி!

--

வாஷிங்டன்,

மெரிக்காவில் ராணுவ விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 16 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

ராணுவ விமானம் ஒன்று எந்திர கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில் 16 ராணுவ வீரர்கள் உடல் கருகி உயிரிந்தனர்.

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் வடக்கு ஜாக்சன் நெடுஞ்சாலை அருகே சி-130 ரக ராணுவ விமானம் ஒன்று 15-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் வானில் பறந்து கொண்டிருந்து.

அப்போது, விமானத்தில் ஏற்பட்ட திடீர் எந்திரக்கோளாறு  காரணமாக நிலைகுலைந்த விமானம், தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 4 பேரின் உடல் மாயமாகி உள்ளது.

மாயமானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.