வாஷிங்டன்:

அமெரிக்காவின் நியூஜெர்சி நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் சீக்கீய விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் சீக்கிய மதத்தின் நம்பிக்கை மற்றும் சீக்கியர்களின் சமுதாய பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நியூஜெர்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் செனட் ஆகிய 2 அவைகளிலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதலுக்கு பின்னர் சீக்கிய சமுதாயத்துக்கு எதிரான மனப்போக்கு அதிகரித்துளளது. அமெரிக்காவில் உள்ள 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சீக்கிய மதம் குறித்த புரிதல் இல்லை. 50 சதவீத சீக்கிய குழந்தைகள் மற்றும் டர்பன் அணிந்த 67 சதவீத குழந்தைகள்
பள்ளிகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

2008ம் ஆண்டு நியூர்ஜெர்சியில் உள்ள ஒரு பள்ளியில் சீக்கிய மாணவர் அணிந்திருந்த டர்பன் சக மாணவரால் தீயிட்டு எரிக்கப்பட்டது. எனினும் அமெரிக்கா வாழ் சீக்கிய மக்கள் தொடர்ந்து அமைதி காத்து வருகின்றனர். அதனால் மக்கள் மத்தியில் சீக்கிய மதம் குறித்த விழப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து இத்தகைய அறிவிப்பை நியூஜெர்சி அரசு வெளியிட்டுள்ளது.