அமெரிக்காவில் மசூதி தீ வைத்து எரிப்பு?

நியூயார்க்:

மெரிக்காவில் உள்ள மசூதி ஒன்று மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. திட்டமிட்டு சிலர் தீவைத்து மசூதியை எரித்தார்களா என்ற கோணத்தில் அமெரிக்க போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

orlando-shooter-mosque-fire-709784

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஃபோர்ட் பியர்ஸ் பகுதியில் இசுலாமிய மையமும், மசூதியும் உள்ளன.  இங்கு இன்று அதிகாலை மர்மமான முறையில் தீ பற்றி எரிந்தது.

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னால் இந்த மசூதியை யாரோ ஒரு நபர் நெருங்கி வருவதை கண்காணிப்பு காணொளி பதிவு காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூன் 12 ஆம் நாள் அமெரிக்காவில் பல்ஸ் இரவு கேளிக்கையகத்தில் ஒமர் மாத்தீன் என்கிற இஸ்லாமியர் நடத்திய துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் இறந்தனர்.  ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தற்போது மர்மமான முறையில் எரிந்த மசூதிக்கு,  துப்பாக்கிச்சூடு நடத்திய இந்த ஓமர் மாத்தின், வந்து சென்றதாக முன்பு தகவல்கள் வெளியானது.

ஆகவே மசூதிக்கு யாரேனும் திட்டமிட்டு தீ வைத்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.