கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நிமிடங்கள்:  வீடியோ

மெரிக்காவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட  கறுப்பினத்தவரின் உயிர் பிரியும் நேரத்தில் வீடியோ எடுத்த அவரின் தோழி அதனை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.  இந்த  வீடியோ தற்போது சமூகவலைத்தளமெங்கும் பரவிவருகின்றது.

நேற்று முன்தினம்  அமெரிக்காவின் மின்னபொலைஸ் நகரில், , கறுப்பினத்தவரான பிலாண்டா கேசிலின் என்பவர், தனது தோழி லேவிஸ் ரெனோல்ட்ஸ் என்பவருடன் தனது காரில் வேகமாக சென்றார்.  அப்போது காரை வழிமறித்த காவல்துறையினர் டிரைவிங் லைசென்ஸை காண்பிக்கமாறு கேட்டுள்ளனர்.  ஆனால் பிலாண்டாவோ, காவலர்களை நோக்கி, துப்பாக்கியை நீட்டியதாக கூறப்படுகிறது.

aaஇதனையடுத்து  அவரை காவல்துறையினர் தங்களது துப்பாக்கியால் சுட்டனர்.  குண்டு பாய்ந்து துடிதுடிக்க ஆரம்பித்தார் பிலாண்டோ.  அவரது தோழி உடனடியாக மருத்துவமனை நோக்கி காரை செலுத்தினார். ஆனால் வழியிலேயே பிலாண்டோவின் உயிர் பிரிந்தது

பிலாண்டோவின் உயிர்பிரியும் இறுதிக் காட்சிகளையும் காவல்துறையினருடன் ஏற்பட்ட  வாக்குவாதத்தையும் தோழி வீடியோவாக தனது  தொலைபேசியில் பதிவு செய்தார். அந்த வீடியோவை தனது போஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இப்போது அந்த வீடியோ சமூகலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ காட்சி இடம் பெற்றுள்ள லேவிஸ் ரெனோல்ட்ஸின் பேஸ்புக் பக்கம்:

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: America Police kill blacks Last Time Video girl Friend facebook, world, அமெரிக்கா, உலகம், கடைசி நிமிடம், கறுப்பினத்தவர், காவல்துறை, கொலை, தோழி, வீடியோ
-=-