Random image

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வடகொரியா வருகை

பியாங்யாங்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்ப்பியோ இன்று பியாங்யாங் வந்துள்ளார்.

வடகொரியா அதிபரின் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ ஆகியோர் அவரை வரவேற்றனர்.

முன்னதாக, அமெரிக்காவில் மைக் பாம்ப்பியோ விமானத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ வடகொரியாவில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதியளிக்கப்பட்டது. இதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்தப்படும்.

இதற்கு வடகொரியாவும் தயாராக இருப்பதாக கருதுகிறேன். அதிகமாக சந்திப்பதன் மூலம் நட்புறவும், நம்பிக்கையும் பலப்படும். இதற்கு வடகொரியா நல்ல தீர்வை அளிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.