வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்தார். 90 நாட்களுக்கு இது அமலில் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் அந்த நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு தாரளமாக வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பலர் விமானநிலையங்ளில் சிக்கி தவித்த சம்பவங்களும் நடந்தது.

டிரம்பின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா மாகாணங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் தடை விதித்தன. இதை எதிர்த்து அமெரிக்க அரசு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. டிரம்பின் உத்தரவை அமல்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தற்போது அனுமதித்துள்ளது.

நீதிமன்றம் அனுமதித்தால் அடுத்த 72 மணி நேரத்தில் தடை அமலுக்கு வரும் என்று கடந்த வாரம் டிரம்ப் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.