அமெரிக்கா: பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிப்பு

--

வாஷிங்டன்:

லஷ்கர் – இ – தொய்பா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேரை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

 

இது குறித்து அமெரிக்காவின் அரசு கருவூலத் துறை அதிகாரி சிகால் மன்டேல்கர் கூறுகையில், ‘‘ லஷ்கர் – இ – தொய்பா, தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ரஹ்மான் ஜெப் பகிர் முகமது, ஹிஸ்ப் உல்லாஹ் அஸ்லாம் கான், திலாவர் கான் நதிர் கான் ஆகியோரை சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்கப்படுகின்றனர்.

இதன்மூலம் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்ய முடியும். இவர்களுடன் அமெரிக்க குடியுரிமை பெற்ற எவரும் எந்த விதமான தொடர்பும் வைக்க கூடாது. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, நிதியுதவி செய்வது போன்றவை தடுக்கப்பட வேண்டும்’’ என்றார்.