வாஷிங்டன்:

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் கட்சியான குடியசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஸ்டீவ் ஸ்கேலிஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. துப்பாக்கியால் சுடப்பட்டு கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகி வருகிறது.

இந்த நிலையில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா மாவட்டத்தில் நடந்த  துப்பாக்கிச்சூட்டில் ஆளும் குடியரசுக் கட்சி கொறடாவும், டிரம்ப் அவையில் முக்கிய பொறுப்பில் உள்ளருமான ஸ்டீவ் ஸ்கேலிஸ் பலியானார்.

விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த ஸ்டீவ் ஸ்கேலிஸ் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில்  படுகாயமடைந்த ஸ்டீவ், அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஸ்கேலிஸின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்திருந்ததாக தெரிவித்த மருத்துவர்களஅ,   சிகிச்சை அளிக்கும் போதே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஸ்டீவுடன் மேலும் ஐவர்  படுகாயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

துப்பாக்கிச்சூட்டை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த விர்ஜினியா போலீசார், துப்பாகிச்சூடு நடத்தியவர் மீது தாக்குதல் நடத்தினர். பிறகு  அவரை கைது செய்த போலீசார், மர்ம நபருக்கு சிகிச்சை அளிக்க மருத்துமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

காவல்துறையினர்  நடத்திய முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இல்லியோனிஸ் மாகாணத்தை சேர்ந்த ஜேம்ஸ் டி ஹாட்கின்சன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அதிபர் தேர்தலின் போது, ஹாட்கின்சன் சமூக வலைதளங்களில் டிரம்ப்க்கு எதிராக பரப்புரை நடத்தியதாகவும்  தெரிய வருகிறது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.