அமெரிக்க போர் விமானம் ஒன்று உலகப் போருக்கு ஒத்திகை பார்க்கும் விதமாக அணு குண்டுகளுடன் வடகொரியா வான் பரப்பில் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணு குண்டுகளை கைவிட வடிவமைக்கப்பட்ட ராக்வெல் பி1-பி என்னும் அமெரிக்காவின் போர் விமானம் வட கொரியா வான் பறப்பில் பறந்ததாக வடகொரியா அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம் போர் நடவடிக்கையிலிருந்து அமெரிக்கா பின்வாங்கவில்லை என்றால் அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்துள்ளது. வட கொரியாவுடன் போர் மூளும் சுழலில் 2 மாதங்களாக தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் கொரிய தீபகற்பம் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ பயிற்சி கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிந்தது.

இந்நிலையில் பயிற்சியின் ஒர் அங்கமாக தான் இந்த போர் விமானம் வடகொரியா வான் பரப்பில் பறந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் ராக்வெல் பி1-பி போர் விமானம் வட கொரியா வான் பரப்பில் பறந்ததை தென் கொரியா உறுதி செய்துள்ளது. மேலும், ராணுவ பயிற்சியில் அந்த விமானம் பங்கேற்றதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.