எச்சரிக்கை மீறல் எதிரொலியா? வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாட்டத்தை நிறுத்திய டிரம்ப்!

வாஷிங்டன்:

ந்தியர் அதிகம் வசிக்கும் அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டா டப்படுவது வழக்கம். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையிலும் தீபாவளி  பண்டிகை பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாமீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என்று டிரம்ப் அச்சுறுத்தி வந்த நிலை யில், இந்தியா அதை கண்டுகொள்ளாமல் ரஷ்யா மற்றும் ஈரானுடன் நட்புறவுடன் பழகி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிபரின் வெள்ளை மாளிகையில் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2017ம் ஆண்டு வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாட்டத்தில் டிரம்ப்

இது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசு மீதான கோபம் காரணமாக டிரம்ப் தீபாவளி கொண்டாடத்தை நிறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் 15 வருடங்களாக பின்பற்றப்பட்டு வந்த வருடாந்திர தீபாவளி கொண்டாட்டம் இவ்வருடம் நடைபெறவில்லை.

இந்தியர்களின் பாரம்பரியமிக்க பண்டிகையான தீபாவளி பண்டிகையை அங்கு வாழ்ந்து வரும் இந்திய வம்சாவழியினரின் வேண்டுகோளை ஏற்று அப்போதைய பிரதமர் ஜார்ஜ் புஷ்  கடந்த 2003-ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடி புதிய வழக்கத்தை ஏற்படுத்தி வந்தார்.

அதைத்தொடர்ந்து வந்த கிளிண்டன், ஒபாமா போன்ற அதிபர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டி மகிழ்ந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை. கடந்த ஆண்டு டிரம்ப் குத்துவிளக்கு ஏற்றி தீபாவளியை கொண்டாடிய நிலையில், இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக   அமெரிக்காவில் நடைபெற்று வரும் இடைத்தேர்தல்கள் என்று கூறப்பட் டாலும்,  ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள்,  ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்கக்கூடாது என்றும், மீறினால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று மிரட்டி வந்த நிலையில்,  அமெரிக்க எச்சரிக்கையை மீறி ரஷ்யா மற்றும  ஈரானிடம் இந்தியா நட்புறவு கொண்டுள்ளதே காரணமாகவே  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை  நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.