பாகிஸ்தான் – இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வரவேற்பு

நியூயார்க்

நியூயார்க் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இந்தியா மற்றும்பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் வேளையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பதான்கோட் விமான படை தளத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.    இதனால் அதிருப்தி அடைந்த இந்தியா தனது அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டது.   அமைதிப்பேச்சு வார்த்தை அப்போதிலிருந்து நின்று போனது.

தற்போது பாக் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான்கான் மோடிக்கு அமைதிப் பேச்சு வார்த்தை அழைப்பு நடத்த அழைப்புக் கடிதம் அனுப்பி உள்ளார்.   அந்த கடிதத்தில் அவர் இருநாடுகளி வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தைகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இம்மாத இறுதியில் ஐநா சபை கூட்டம் நடைபெற உள்ளது.  அந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் பாகிஸ்தன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஜ்மூத் குரேஷியும் கலந்துக் கொள்ள உள்ளனர்.   அப்போது இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்திக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.   அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹீதர் நியுயெர்ட், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளதை நாங்கள் அறிந்தோம்.   இது மிகவும் சிறப்பான செய்தி என கருதுகிறோம்.   இந்த முடிவை அமெரிக்கா வரவேற்கிறது” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி