வாஷிங்டன்:

ஏழு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்கா வருவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த  தடையை எதிர்த்த அட்டர்னி ஜெனரல் சாலி யேட்சை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்காவிற்குள் நுழைய ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய ஏவு இஸ்லாமிய  நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு 120 நாட்களுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு  உலகம் முழுதும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதுடன், உள்நாட்டிலும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஐ.டி., நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் சாலி யேட்ஸ், நீதித்துறை வழக்கறிஞர்களுக்கு எழுதிய கடிதத்தில், டிரம்பின் முடிவை ஏற்க முடியாது. இதற்காக வாதாட முடியாது என்று தெரிவித்திருந்தார்.  இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அவருக்கு பதில், டானா போன்டே என்பவர் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்படுவதாக  தெரிவித்துள்ளது.