பிரபல அமெரிக்க பாடகரான கென்னி ரோஜர்ஸ் காலமானார்.  அவருக்கு வயது 81. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.

பிரபல பாடகர் மட்டுமின்றி  பாடல்களை உருவாக்குவதிலும் வல்லமை பெற்றவர் கென்னி ரோஜர்ஸ்.  மூன்று கிராமி விருதுகளையும் வென்றுள்ள ரோஜர்ஸ், 1970 மற்றும் 1980ம் ஆண்டுகளில்  பாப்  வகை பாடல்களில் உலக அளவில் நம்பர்1 இடத்தில் இருந்து புகழின் உச்சத்தை எட்டியவர்.

கென்னி ரோஜர்ஸ் 2013 ஆம் ஆண்டில் கன்ட்ரி மியூசிக் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார், அதே ஆண்டில், நாட்டுப்புற இசை சங்கத்திலிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.