ம்பா, ஃப்ளோரிடா

மெரிக்காவைச் சேர்ந்த புது மண தம்பதியர் திருமணப் பரிசாக பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி கோரி உள்ளனர்.

அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா என்னும் பகுதியில் வசிப்பவர் கெல்லி என்னும் இளம்பெண்.   இவர் இங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.   தம்பா பகுதியில் வாழும் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவர்கள் ஆவார்கள்.   பல மாணவர்கள் புத்தகம் உள்ளிட்ட பள்ளி பொருட்கள் வாங்க முடியாமல் கல்வியைப் பாதியில் நிறுத்தி உள்ளனர்.

சமீபத்தில் கெல்லிக்கும் மாட் காமெரோன் என்னும் இளைஞருக்கும் திருமணம் நிச்சயமானது.  திருமணத்துக்கு வரும் பரிசுப் பொருள்களைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு உதவ இருவரும் முடிவு செய்தனர்.   இந்நிலையில் கெல்லிக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது.

பரிசுகளைப் பெற்று அதைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதை விட நேரடியாகப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பொருட்களையே பரிசாகப்  பெறலாம்  என கெல்லி தெரிவித்தார்.   அதை மாட் ஒப்புக் கொண்டார்.  எனவே இருவரும் தங்களுக்கு திருமணப் பரிசு வழங்க விரும்புவோர் பள்ளிக் குழந்தைகளுக்கான பொருட்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதையொட்டி பலரும் மாணவர்களுக்கான சீருடை, நீர் பாட்டில்கள், உள்ளிட்ட  ஏராளமான பொருட்களைப் பரிசாக அளித்துள்ளனர்.  இந்த பொருட்களை உள்ளூரில் உள்ள ஏழை மாணவர்களுக்கு மாட் மற்றும் கெல்லி ஆகியோர் அளித்து மகிழ்ந்துள்ளனர்.