American, Delta, and United Airlines slam Emirates’ decision to scale back service in the US

 

கடும் இழப்பு ஏற்படுவதால், அமெரிக்காவுக்கான விமான சேவைகளைக் குறைக்கப் போவதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பை நகைப்புக்குரியது என, அமெரிக்க விமான நிறுவனங்கள் கிண்டலடித்துள்ளன.

 

பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால், அமெரிக்காவின் பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சீட்டில் உள்ளிட்ட நகரங்களுக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் 12 சேவைகளை இயக்கி வந்தது. இந்த சேவைகளை 5 ஆக குறைக்கப்போவதா அந்நிறுவனம் அறிவித்திருந்தது. நட்டம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சில கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்காவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

 

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு நகைப்புக்குரியது என்று அமெரிக்காவின் விமான நிறுவனங்கள் விமர்சித்துள்ளன.

 

அமெரி்க்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பாக கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எமிரேட் ஏர்லைன்ஸ் நிறுவனம், அமெரிக்காவுக்கான விமான சேவைகளை ஒரு போதும் லாபநோக்கத்துடன் இயக்கியதில்லை என்று கூறப்பட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்தில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே எமரேட்ஸ் நிறவனம் அமெரிக்காவுக்கு விமானங்களை இயக்கி வந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதென்ஸ், கிரீஸ் வழியாக அமெரிக்காவுக்கு இயக்கப்படும் விமானம், முழுக்க முழுக்க நட்டத்தில் இயக்கப்பட்டு வருவதாகவும், அரசு மானியம் இல்லாவிட்டால் இந்த சேவையை தொடர முடியாது என்றும் அமெரிக்க விமான நிறுவனங்களின் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.