அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு உதவி அளிக்கக் கூடாது : அமெரிக்க முன்னாள் ஆளுநர்

ரோலினா

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் வரை அந்நாட்டுக்கு அமெரிக்கா எவ்வித உதவியும் செய்யக் கூடாது என கரோலினா மாநில முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

 

தீவிரவாதிகளின் ஒரே புகலிடம் பாகிஸ்தான் என பல உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் பலர் இது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல உதவிகளை அளித்து வருகின்றது. இதற்கு வெளிநாட்டினர் மட்டுமின்றி அமெரிக்கர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே ஒரு புதிய குழு ஒன்றை தொடங்கி உள்ளார். “ஸ்டாண்ட் அமெரிக்கா நவ்” என பெயிரடப்பட்ட அந்தக் குழு அமெரிகாவின் பாதுகாப்பு, வல்லமை மற்றும் முன்னேற்றத்துக்காக ஆரம்ப்க்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் அமெரிக்க அரசுக்கு நிக்கி ஹாலே செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த செய்தியில் நிக்கி ஹாலே, “நாம் நல்லதை நினைத்து பாகிஸ்தானுக்கு உதவி செய்கிறோம். ஆனால் பல விவகாரங்களில் பாகிஸ்தான் நமக்கு எதிராக ஐநா சபையில் நடந்துக் கொள்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் உத்வி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு அந்த பணத்தை ராணுவ செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்டது. ராணுவத்தினருக்கு செல்லும் சலை உள்ளிட்ட உள்கட்டுமானங்கள் செய்யப்பட்டன. மக்களுக்கு எந்த நல திட்டமும் செய்யவில்லை.

அது மட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை அழிக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தனது புகலிடம் அளித்துள்ளது. எனவே அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு அளிக்கும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும். அந்நாடு தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் வரை எவ்வித உதவியையும் செய்யக்கூடாது” என தெரிவித்துள்ளார்.