அமெரிக்கா : முன்னாள் அதிபர் மனைவி மரணம்

வாஷிங்டன்

மெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச் டபுள்யூ புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் நேற்று மாலை காலமானார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச் டபுள்யூ புஷ்.   இவர் மனைவி பார்பரா புஷ்.  92 வயதாகும் இவர் உடல்நலம் பாதிக்கபட்டிருந்தார்.    இவருடைய உடல் நலம் தேற வேண்டும் அவருடைய குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகின.

நேற்று மாலை பார்பரா புஷ் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  பார்பராவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.