கொடூர நோய் தாக்கி அமெரிக்க மாடல் அழகி உயிரிழப்பு

வாஷிங்டன்:

2ம் உலகப் போரின் போது அமெரிக்காவுக்காக மாடல் அழகி ரெபாக்கா ஜேனிம் பணியாற்றினர். முதுமை பருவத்தில் டெமிண்டியா பிரச்சினை காரணமாக ஜார்ஜியா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அங்கு சிரங்கு நோய் தொற்று ஏற்பட்டது. நோயின் கொடூரம் காரணமாக சில நாட்களில் ரெபாக்காக்கு சிரங்கு உடல் முழுவதும் பரவி உயிரிழந்தார்.

அவருடைய கைகள் மோசமாக பாதித்திருப்பதால் அவற்றை தொட வேண்டாம் என்றும், தொட்டால் கை கழன்று விழும் நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் மீது ரெபக்காவின் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.

ரெபக்காவின் உடலை பரிசோதித்த மருத்துவர்,‘‘ தன் வாழ் நாளில் இதுபோன்ற கோர மரணத்தைக் கண்டதில்லை. அவர் இறக்கும்போது மிகுந்த வேதனை அடைந்திருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். ரெபக்காவை அவரது குடும்பத்தினர் கண்டு கொள்ளாமல் விட்டதன் மர்மம் என்ன? என்ற கேள்விகளை ஊடகங்கள் எழுப்பியுள்ளன.