அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் : செரினாவை தோற்கடித்த நவாமி ஒஸாகா
நியூயார்க்
நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நவாமி ஒஸாகா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. நியூயார்க் நகரில் நடந்த இந்த போட்டியில் அமெரிக்கவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பானின் நவாமி ஒஸாகா ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பான இந்த போட்டி டென்னிஸ் ரசிகர்களின் ஆர்வத்தை வெகுவாக தூண்டியது. இரு வீராங்கனைகளின் ரசிகர்களும் தங்கள் அபிமான ஆட்டக்காரர் வெற்றி பெற ஊக்கக் குரல் எழுப்பியபடி போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த போட்டியில் நவாக ஒஸாகா வெற்றி பெற்றார். அவர் 6-2, 6-4 என்னும் நேர் செட்களில் செரினா வில்லியம்ஸை தோற்கடித்தார். இந்த போட்டியில் வென்ற ஜப்பான் வீராங்கனை நவாமி ஒஸாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.