வாஷிங்டன்

விண்வெளியில் 328 நாட்கள் தங்கி உலக சாதனை படைத்த கிறிஸ்டினா கோச் நேற்று பூமிக்கு திரும்பினார்.

விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச ஆய்வு மையம் ஒன்றை அமைத்துள்ளனர்.     ஆறு விண்வெளி வீரர்கள் தங்கி  அந்த மையத்தில் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.  இந்த அறு பேரில் மூவர் சுமார் 5 அல்லது ஆறு மாத ஆய்வுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பி வருவார்கள்.  அதன் பிறகு மூன்று பேர் இவர்களுக்குப் பதிலாகச் சர்வதேச ஆய்வு மையத்துக்கு அனுப்பப் படுவார்கள்.

இதுவரை 36 நாடுகளைச் சேர்ந்த 550க்கும் அதிகமான விண்வெளி வீரர்கள் இந்த மையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை செய்துள்ளனர்.  அவ்வகையில் கடந்த 2019 ஆம் வருடம் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்னும் வீராங்கனை ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டார்.  அவர் 328 நாட்கள் விண்வெளியில் தங்கி விட்டு நேற்று பூமிக்குத் திரும்பி உள்ளார்.

கிறிஸ்டினா கோச் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வு நடத்திய போது 4 முறை விண்வெளியில் நடந்துள்ளனர்.  அத்துடன் அவர் தனது சக ஊழியர் ஜெசிகா மீர் என்பவருடன் கடந்த அக்டோபர் 12 அம் தேதி விண்வெளியில் இணைந்து நடந்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.    இது வரை விண்வெளியில் 15 பெண்கள் பயணம் செய்துள்ள போதிலும் அதிக நாட்கள் தங்கியவர் என்னும் சாதனையை கிறிஸ்டினா படைத்துள்ளார்.