ஒரே நாளில் இரண்டு லாட்டரிப் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண்!

ரோலினா

மெரிக்கப் பெண் ஒருவருக்கு இரண்டு லாட்டரி பரிசுகள் ஒரே நாளில் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் கரோலினாவில் வடக்கு பகுதியில் வசிக்கும் பெண் கிம்பர்லி மோரிஸ்.   இவர் வழக்கமாக லாட்டரி டிக்கட் வாங்கும் பழக்கம் உடையவர்.   சில நாட்களுக்கு முன்பு டைமண்ட் லாட்டரி என்னும் லாட்டரி டிக்கட்டை வாங்கி இருக்கிறார்.  இதில் மோரிசுக்கு இந்திய மதிப்பின்படி ரூ. 6 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.

மகிழ்ச்சி அடைந்த மோரிஸ் அந்த லாட்டரி அலுவலகத்துக்கு வந்து தனது பரிசைப் பெற்றுக் கொண்டார்.  வீட்டுக்குச் செல்லும் வழியில் மீண்டும் ஒரு லாட்டரி டிக்கட்டை வாங்கி உள்ளார்.  இந்த லாட்டரி டிக்கட் மூலம்  அவருக்கு மீண்டும் லாட்டரியில் பரிசு கிடைத்துள்ளது.

இரண்டாவதாக வாங்கிய லாட்டரி டிக்கட்டில் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.2,58,00,000 பரிசு கிடைத்துள்ளது.  இரண்டு முறை ஒரே நாளில் லாட்டரிப் பரிசு கிடைத்த கிம்பர்லி மோரிஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.    மோரிஸ் இந்தப் பரிசுப் பணத்தை தனது பெயரிலும் குழந்தைகள் பெயரிலும் முதலீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.