வாஷிங்டன்: கொரோனா தடுப்பு மருந்து, அமெரிக்காவில் விரைவில் புழக்கத்திற்கு வராத பட்சத்தில், வேறு நாடுகளில் விரைவில் பயன்பாட்டிற்கு வந்தால், அங்கே சென்று அதைப் பெற்றுக்கொள்ள பல அமெரிக்கர்கள் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

கொரோனா சூழலை மிக மோசமாக கையாண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் கொரோனா தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வராது என்றும் கூறப்படுகிறது.

அதேசமயம், சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை, இந்தாண்டு முடிவதற்கு கொரோனா தடுப்பு மருந்துகளின் பலகட்ட சோதனைகளைக் கடந்து, அவற்றைப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.

எனவே, அப்படியான நிலை ஏற்பட்டால், தடுப்பு மருந்து எங்கே கிடைக்கிறதோ, அந்த நாடுகளுக்குச் சென்று அதைப் பெற்றுக்கொள்வதற்கு பல அமெரிக்கர்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.