வாஷிங்டன்

கொரோனாவின் தாக்கம் பின்னாளில் உணவு உள்ளிட்ட உடைமைகளுக்கு பெரும் போராட்டத்தை, வன்முறையை உருவாக்கும் எனக் கருதி அமெரிக்கர்கள் துப்பாக்கிகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பல்லாயிரம் உயிர்களை பலிகொண்டு வரும் கொரோனா, ஸ்பெயின் இத்தாலியை அடுத்து அமெரிக்காவில் பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

“கொரோனா பாதிப்பால் வரும் நாட்களில் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மற்றும் உடைமைகளுக்கான போராட்டமும், வன்முறையும் வெடிக்கும். அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே அமெரிக்கர்கள் துப்பாக்கிகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

FBI தகவலின்படி மார்ச் மாதத்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள விண்ணப்பித்தவர்களில் 3.7 மில்லியன் மக்களின் உண்மைத் தன்மை கண்டறியப் பட்டுள்ளது.

மேலும் ஒரே நாளில் – மார்ச் 21 இல், 2 இலட்சம் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், ஒரு மாதத்தில் 20 இலட்சம் துப்பாக்கிகள் விற்பனையாகி உள்ளன.  இதில் 5 இலட்சம் பேர் டெக்ஸாஸ், ஃப்ளோரிடா, கலிபோர்னியா மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்கர்களின் இந்த போக்கு உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது…