நிபா வைரஸ் ஒழிப்பு…..கேரளா முதல்வருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா

திருவனந்தபுரம்:

நிபா தாக்குதலை கட்டுப்படுத்தியதற்காக கேரளா முதல்வர் பினராய் விஜயனுக்கு அமெரிக்கா நிறுவனம் பாராட்டு விழா நடத்துகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இந்த நோய் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற கேரளா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் மூலம் நிபா வைரஸ் தாக்குதல் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

கேரளா முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் சுகாதார அமைச்சர் சைலஜா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதாக வட அமெரிக்காவை சேர்ந்த பால்டிமோர் இன்ஸ்டிடியூட் ஆப் ஹூயுமன் வைராலஜி என்ற நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து பினராய் விஜயனுக்கு பாராட்டு விழா நடந்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரி க்காவில் உள்ள கேரளா சங்கங்களின் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜூலை 5ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை பினராய் விஜயன் அமெரிக்கா செல்கிறார்.

அங்கு செல்லும் போது 6ம் தேதி பல்டிமோர் நிறுவனம் நடத்தும் பாராட்டு விழாவிலும் பினராய் விஜயன் கலந்துகொள்கிறார். மக்கள் பிரநிதி ஒருவருக்கு இந்நிறுவனம் பாராட்டு விழா நடத்துவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.