2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் முதல் ‘இந்து’ பெண்

வாஷிங்டன்:

அடுத்த அமெரிக்க அதிபருக்கான  அதிபர் தேர்தலில் முதல்முறையாக  ‘இந்து’ மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் களத்தில் குதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறேன் என்று, அமெரிக்க நாடாளு மன்ற உறுப்பினரான இந்து மதத்தை சேர்ந்த துளசி கபார்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரான, டொனால்டு டிரம்ப் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று 2017ம் ஆண்டு ஜனவரியில் பதவி ஏற்றார். அவரது  பதவிக்காலம், அவரது பதவிக்காலம் முடிவடைந்தும், அடுத்த அதிபருக்கான தேர்தலில் அவர் மீண்டும் களமிறக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில்,  அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ள துளசி என்ற இந்து பெண் எம்.பியை களமிறக்க  டெமாக்ரடிக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின்  ஹவாய் மாகாணத்திலிருந்து எம்.பி.யாக தேர்வான துளசி, முன்னாள் ராணுவ வீராங்கனை என்பதும், ஈராக் போரில் பங்குபெற்றவர் என்பதும் சிறப்புக்குரியது.

இவர் தேர்தலில் களமிறங்குவதற்கு முன்பு, அவருடைய கட்சிக்குள் இருக்கும் மற்ற  போட்டி யாளர்களை தோற்கடித்து, மற்ற தலைவர்களின் ஆதரவும் தேவைப்படும் நிலையில், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அமெரிக்க இந்தியர்கள் மத்திய இவர் நல்ல ஆதரவைப் பெற்றுள்ள துளசி,  ஐரோப்பிய வம்சா வளியை சேர்ந்தவர், இவர் தனது இளம் வயதிலேயே இந்து மதத்தை தழுவியது குறிப்பிடத்தக்கது.