மோடியின் வாயை அடையுங்கள்: தேர்தல் கமிஷனுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய அமேதி இளைஞர்

டில்லி:

றைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது அபாண்டமாக குற்றச்சாட்டுக்களை கூறி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுங்கள், என்று வலியுறுத்தி உ.பி. மாநிலம் அமேதி தொகுதியை சேர்ந்த  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ரத்தத்தினை கொண்டு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து கடுமையாக  விமர்சனம் செய்தார். “ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவருடைய இறுதி காலத்தில் ஊழலில் நம்பர் ஒன்னாக இருந்தார்” என்று குற்றம் சாட்டி பேசினார்.

ரஃபேல் விவகாரத்தில் மோடியை ராகுல் காந்தி  உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருவதால், அதை எதிர்கொள்ள முடியாத மோடி, ராகுலின் தந்தையான மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது மோடி குற்றம் சாட்டி பேசினார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. தேர்தல் கமிஷனிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் கமிஷன் மோடிக்கு ஆதரவாகவே செயல்பட்டது. இது தொடர்பான புகாரும் உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  உத்தரபிரதேச மாநிலம் அமேதியைச் சேர்ந்த மனோஜ் கஷ்யப் என்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  இளைஞர், மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தன் ரத்தத்தால் கடிதம் ஒன்றை எழுதி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “முன்னாள் பிரதமர், ராஜீவ்காந்தி ஏழைகளின் இதயங்களில் வாழ்ந்து வருகிறார். பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை நாட்டில் அமல்படுத்தினார். நம் நாட்டில், கம்ப்யூட்டர் புரட்சிக்கு வழி வகுத்தார். ஓட்டளிக்கும் வயதை 18 ஆகக் குறைத்து, இளைய தலைமுறையினரும் ஓட்டளிக்கும் நடைமுறையை ஏற்படுத்தினார். பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூட, ராஜீவ்காந்தியை புகழ்ந்து பேசியிருக்கிறார். அப்படிப்பட்ட ராஜீவைப் பற்றி, பிரதமர் நரேந்திர மோடி தரக்குறைவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் இவ்வாறு பேசாமல் இருக்கும்படி, மோடிக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி