பாட்னா:

கொரோனாவின் ஊரட்ங்கு 3வயது பச்சிளங்குழந்தையின் உயிரை பறித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரின் ஜெகனாபாத்தைச் சேர்ந்த  இளம்தம்பதியின் 3 வயது குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அந்த குழந்தையை  மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்து ஆம்புலன்ஸ் வேண்டி அரசு மருத்துவமனைக்கு அவசர கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் அனுப்ப ஊரடங்கை காரணம் காட்டி, மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண்  உயிருக்கு போராடிய தனது கைக்குழதையைத் தூக்கிக்கொண்டு சாலையில் ஏதாவது வாகனம் கிடைக்குமா என தேடினார். எதுவும் இல்லாத நிலையில், அழுதுகொண்டே மருத்துவமனையை நோக்கி ஓடினார். ஆனால், துரதிருஷ்டவசமாக, அந்த குழந்தை செல்லும் வழியிலேயே குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.

இது தெரியாமல், குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், தனது  மார்போடு அணைத்தபடி கண்ணீருடன் அழுதுகொண்டே குழந்தையை சாலையில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.. கொரோனா வைரஸின் பாதிப்பு, அதன் ஊரடங்கு மக்களை எந்த அளவுக்கு துன்பப்படுத்தி வருகிறது என்பதற்கு இதுவும் ஒன்று சான்று…

குழந்தையுடன் அந்த இளந்தாய் சாலையில் அழுதுகொண்டு ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.