அமர்நாத் யாத்திரை நாளை தொடக்கம்…..பலத்த பாதுகாப்பு

ஸ்ரீநகர் :

அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் அமர்நாத் யாத்திரைக்காக செய்யப்படுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில், புனித யாத்திரையின் முதல் குழு காஷ்மீர் பகவதி நகர் பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து வாகனங்களில் நாளை புறப்பட்டு செல்கிறது.

கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்காக 2.60 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு 1.96 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 40 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக ரேடியோ அதிர்வெண் பயன்படுத்தி யாத்ரீகர்கள் வாகனங்களை பாதுகாப்புப் படையினர் கண்காணிக்கவுள்ளனர் நாளை தொடங்கும் யாத்திரை ஆகஸ்ட் 26-ம் தேதி நிறைவடையும்.

கடந்த ஆண்டு அமர்நாத் யாத்ரீகர்கள் மீத தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.