கொரோனாவை பொருட்படுத்தாமல் வெளிநாட்டுப் படப்பிடிப்புக்குப் பறந்த அக்ஷய் குமார்..

கொரோனாவை பொருட்படுத்தாமல் வெளிநாட்டுப் படப்பிடிப்புக்குப் பறந்த அக்ஷய் குமார்..

கொரோனா காரணமாக உள்நாட்டில் அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ’பெல்பாட்டம்’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்புக்கு மும்பையில் இருந்து நேற்று பெரும் கூட்டமே இங்கிலாந்து நாட்டுக்கு கிளம்பி சென்றுள்ளது.

அக்ஷய்குமார், ஹுமா குரேஷி, லாரா தத்தா, மகேஷ் பூபதி, உள்ளிட்டோர் இந்த குழுவில் அடங்குவர்.

இவர்களுடன் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் சிறப்பு விமானத்தில் மும்பை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்துக்கு நேற்று காலையில் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த குழுவில் நம்ம ஊர் நடிகர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

அவர் வேறு யாரும் அல்ல.

’’தலைவாசல்’’ விஜய் தான்.

அவர் நடிக்கும் இரண்டாவது இந்திப்படம் இது.

‘’நான்கு மாதங்களாக ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷுட்டிங் செல்வது, அதுவும் வெளிநாட்டுக்குப் போவது ‘திரில்’ அனுபவம்.

விமானம் ஏற படப்பிடிப்பு குழுவினர் உடல் முழுக்க பாதுகாப்பு கவசங்கள் அணிந்து விமான நிலையம் வந்திருந்தனர். விமான நிலையம் சென்ற போது ஏதோ,, யுத்த களத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு’’ என்கிறார், விஜய்.

கொரோனாவுக்கு மத்தியில் வெளிநாட்டில் நடக்கும் முதல் படப்பிடிப்பு -‘பெல்பாட்டம்’’ தான்.

-பா.பாரதி.