கொரோனாவுக்கு மத்தியில்  ம.பி.மந்திரி சபை விஸ்தரிப்பு..

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான் முதல் –அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததும், மந்திரி சபையை விஸ்தரிக்க அவர் திட்டம் வைத்திருந்தார்.

கொரோனா இப்போதைக்குக் குறைவதாகத் தெரியாததால், எம்.எல்.ஏ.க்கள். நச்சரிப்பு தாங்க முடியாத நிலையில் நாளை தனது மந்திரி சபையை விஸ்தரிக்க சவுகான் முடிவு செய்துள்ளார்.

டெல்லியில் தற்போது முகாமிட்டுள்ள அவர், பா.ஜ.க. உயர் மட்ட தலைவர்களிடம், அமைச்சர்கள் பட்டியலுக்கு ஒப்புதல் பெற்று விட்டு இன்று மாலை போபால் திரும்புகிறார்.

நாளை விரிவு படுத்தப்படும் அவரது, அமைச்சரவையில், ஜோதிர் ஆதித்யா சிந்தியாவின் ஆட்கள் 9 பேருக்கு இடம் அளிக்கப்படுகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களாக இருந்த இவர்கள், சிந்தியாவுடன் சேர்ந்து பா.ஜ.க.வில் சேர்ந்ததால், சவுகானால் மீண்டும் முதல்வர் நாற்காலியைப் பிடிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.